மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க அனைத்து வகுப்புகளுக்கும் குறைந்த பாடநூல்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. நேரடி வகுப்புகள் நடத்தப்படாததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க அனைத்து வகுப்புகளுக்கும் குறைந்த பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் வெளியிட என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது.