அட்லீ- பிரியா அட்லீ இருவரும் தங்கள் செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
My baby boo turns 5,happy bday my baby lil angel ,u ve been every thing to us &ve brought so much of positivity&happiness rit frm the time u stepped in our life,mommy&daddaa luv u more than any thing in this world❤️happy bday my lil angel🥰 #beckypapa #beckypapaturns5 @Atlee_dir pic.twitter.com/3HgYeaY9i6
— Priya Mohan (@priyaatlee) July 6, 2021
மேலும் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா இருவரும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அட்லீ- பிரியா அட்லீ தங்கள் செல்ல நாய்க்குட்டியின் 5-வது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரியா அட்லீ டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.