Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டம்… விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் பிக்பாஸ் ஆரி… வெளியான புகைப்படம்…!!!

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியலில் பிக்பாஸ் பிரபலம் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து நான்காவது சீசனும் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். மேலும் பாலாஜி முருகதாஸ் 2-வது இடத்தையும், ரியோ ராஜ் 3-வது இடத்தையும் பிடித்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்த ஆரி தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலில் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். தற்போது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. இதில் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |