Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டம்… விஷ்ணு விஷால்- ஜுவாலா கட்டா திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில்  உருவான காடன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஷ்ணு விஷாலும் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையடுத்து இருவரும் ஏப்ரல் 22-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் இன்று விஷ்ணு விஷால் -ஜுவாலா திருமணம் சிறப்பாக நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஷ்ணு விஷால்- ஜுவாலா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |