கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவில் என்ற பகுதியில் தோப்புகளில் இயற்கையுடன் ஒன்றிணைந்து ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. அங்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள், உணவுகள் ஆகியவற்றை உண்டு குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் குரங்குகள் கையில் ஒரு மதுபாட்டில் கிடைத்துள்ளது. அவ்வாறு கையில் கிடைத்த மது பாட்டிலை வைத்து பல மணி நேரமாக திறக்க போராடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குரங்குகளின் இந்த செயலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வேடிக்கையாக பார்த்து சென்றனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
குரங்குகள் கையில் கிடைத்த மது பாட்டில்.. பல மணி நேரமாக திறக்க போராடும் காட்சிகள்..#Monkey #liquor #viralvideo #viral pic.twitter.com/X0XeGgchKf
— Esakki Raja (@rajaviaz) June 19, 2022