விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் ஜாக்குலின் . இதையடுத்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது ஜாக்குலின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ஜாக்குலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கைக்குழந்தையாக இருக்கும் ஜாக்குலினை அவரது அம்மா தூக்கி வைத்திருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.