குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. மேலும் முதல் சீஸனில் கோமாளிகளாக வந்த பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை ஆகியோர் இந்த சீசனிலும் கோமாளிகளாக கலக்கி வந்தனர். இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வருகிற ஏப்ரல் 14ம் தேதி மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
போடு தகிட தகிட! 😍 #CookWithComali – வரும் சனிக்கிழமை மதியம் 3:30 மணிக்கு நம்ம விஜய் டிவியில்… #VijayTelevision pic.twitter.com/rDQH2L5r8J
— Vijay Television (@vijaytelevision) April 8, 2021
மேலும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் கனி என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி முடிவடைவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர் . இந்நிலையில் வருகிற சனிக்கிழமை மதியம் 3:30 மணிக்கு குக் வித் கோமாளி ரீகேப் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.