Categories
தேசிய செய்திகள்

செம சூப்பர்…! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. இனி வாரத்தில் 5 நாட்கள் தான்…!!!

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5  நாள் வேலை என்ற அறிவிப்பை மாநில அரசு  பிறப்பித்துள்ளதால்   அரசு ஊழியர்கள்  மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் படேல் தலைமையிலான  காங்கிரஸ்  கட்சியின்  ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 73 ஆவது குடியரசு தினம் கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற நிலையில் மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளை முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி அரசு ஊழியர்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கத்தோடு மாநில அரசு  ஒரு வாரத்தில் 5 நாட்கள் வேலை திட்டத்தை செயல்படுத்தும் எனவும், ஓய்வூதிய திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 10  %லிருந்து  14 %மாக  உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்று  அறிவிப்புகான  அரசாணையை வெளியிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 .30  மணி வரை எனவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அரசின் இந்த அறிவிப்பால்  அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியை மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |