காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பவளவிழா ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, முதல்வர் முக ஸ்டாலின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். இந்தக் கல்லூரி பல லட்சம் மாணவர்கள் உருவாக்கியுள்.து இந்த விதையை விதைத்தவர் அழகப்பர் .
மு க ஸ்டாலின் மக்களுக்கு சொன்னதையும் சொல்லாததையும் கூட செய்து வருகிறார். இதனால் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். கல்விக்கு மட்டும் பட்ஜெட்டில் 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.