5ஜி சேவையை தொடங்குவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான டவர்கள் கட்ட பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5ஜி சேவையை தொடங்குவதற்கு முன்னர் முன்னேற்பாடாக நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 800 செல்போன் கோபுரங்கள் தொலைத்தொடர்பு கட்டமைப்பு திட்டத்துடன் உருவாக்கப்பட்டுவிட்டன . இந்த செல்போன் கோபுரங்கள் அனைத்தும் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டிருப்பதை, அரசு உறுதி செய்வதற்காக இத்தகைய புதிய டவர்கள் உருவாக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 6.8 லட்சம் டவர்கள் உள்ள நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் இவற்றின் எண்ணிக்கை 15 லட்சம் டவர்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்களின் முக்கிய தேவையாக இணையம் செயல்பட்டு வருவதால் இத்தகைய உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய மயமாதலை உறுதி செய்வதற்காக பங்குதாரர்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.