பிஎன்பி மெட்லைஃப் கியாரண்டீட் கோல் பிளான் இன்சூரன்ஸ் திட்டத்தில் பல சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. அதில் வாழ்வில் எதிர்பாராமல் நிகழும் அசம்பாவிதங்களில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு தருவதும், எதிர்காலத்தை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். வாடிக்கையாளர்கள் ஒரே பிரீமியம் முதல் 12 ஆண்டுகள் வரையிலான பிரீமியம் வரை விருப்பம் போல தேர்வு செய்துகொள்ளலாம்.
மேலும் மெச்சூரிட்டி வரை முழு கவரேஜ் உண்டு. இதனை தொடர்ந்து பாலிசிதாரர் இறந்துவிட்டால் அல்லது கடும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் பிரீமியம் தள்ளுபடி உண்டு. இதனை அடுத்து இன்சூரன்ஸ் பலன்கள் மொத்தமாகவும் உத்தரவாதத்துடனான வருமானமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதிக பிரீமியத் தொகைக்கு அதிக பலன்கள் உண்டு. மேலும் பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் அதற்கான சர்வைவல் பலன்கள் உண்டு.
இந்நிலையில் கட்டணங்களை உங்களுக்கு விருப்பமான தேதியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மொத்த பாலிசி காலத்துக்கும் ஆயுள் கவரேஜ் உண்டு. மேலும் 5 ஆண்டு, 7 ஆண்டு, 10 ஆண்டு, 12 ஆண்டு என உங்கள் விருப்பம் போல பாலிசி காலத்தை தேர்வு செய்து பிரீமியம் செலுத்தலாம். இந்த பாலிசியில் தற்கொலை மரணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர் தற்கொலை செய்துகொண்டால் பாலிசி பலன்கள் முழுமையாக கிடைக்காது.