ஒரு குவிண்டால் கரும்புக்கான ஆதரவு விலையை ஐந்து ரூபாய் உயர்த்தி 2.90 ரூபாய் என்று ஒன்றிய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஒன்றிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்து விளக்கமளித்தார். 2021 2022ம் ஆண்டில் அறுவடை செய்யப்படும் கரும்புக்கான ஆதரவு விலையை விளித்திறன் திறன் கொண்ட கரும்புகளுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு 275 ஆதரவு விலையும், 10 சதவீகித விளித்திறன் கொண்ட கரும்புகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 290 ஆதரவு விலையும் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
மேலும் கடந்த ஆண்டு 70 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப் பட்டதாகவும் எத்தனாலுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் கூறினார். ஒன்றிய அரசின் இந்த முடிவால் 5 கோடி கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். ஒன்றிய அரசின் ஆதரவு விலையை காட்டிலும் தமிழ்நாடு, உத்திரப்பிரதேச மாநிலங்கள் கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.