தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இதையடுத்து வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பூ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய பெயரில் 4 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 691 மதிப்பில் அசையும் சத்துக்களும், சுந்தர் சி பெயரில் ஒரு கோடியே 81 லட்சத்து 98 ஆயிரத்து 58 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய முதல் குழந்தை பெயரில் 11 லட்சம் மதிப்பிலான சொத்துக்களும், 2வது பெயரில் 12 லட்சம் மதிப்பிலான சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் வேட்புமனுவில் தான் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் கூறியுள்ளது தான் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் 8 ஆம் வகுப்பு வரை படித்தவரால் எப்படி இந்த அளவுக்கு அறிவாகவும், திறமையாகவும் பேச முடிகிறது என்று கூரப்படுகிறது.