இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அறிவு இருவரும் ‘டாக்டர்’ படத்தின் பாடலுக்காக இணைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, அர்ச்சனா, டோனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
#Doctor 💉🔥 https://t.co/FJ2pGkjNmj
— Anirudh Ravichander (@anirudhofficial) March 20, 2021
ஏற்கனவே டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தின் புதிய பாடலுக்காக அறிவு மற்றும் அனிருத் இருவரும் இணைந்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் படத்தின் வாத்தி ரைடு பாடலில் இணைந்து பட்டைய கிளம்பினர். தற்போது இவர்கள் டாக்டர் படத்திற்காக இணைந்துள்ளதால் இந்தப் படத்திலும் செம மாஸான ஒரு பாடல் ரெடியாகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.