நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரங் தே’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கடந்த வருடம் இவர் நடிப்பில் உருவான பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
And here's the #RangDeTrailer!❤️
👉🏻 https://t.co/X6ztmuXd7fHope you all like it!
Coming to theatres near you this 26th March.Love,
Anu & Arjun.#RangDe #RangDeOn26thMarch 🌈 @actor_nithiin @pcsreeram @ThisIsDSP @dirvenky_atluri @vamsi84 @ShreeLyricist @adityamusic @SVR4446— Keerthy Suresh (@KeerthyOfficial) March 19, 2021
மேலும் இவர் தெலுங்கில் ரங் தே, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . இதில் நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்துள்ள ‘ரங் தே’ படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ரங் தே படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .