Categories
சினிமா தமிழ் சினிமா

செம தில்லு தான்…! ஹெலிகாப்டரில் இருந்து குதித்த பிரபல நடிகை….. பாராட்டும் ரசிகர்கள்….!!!!!

தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.  தற்போது ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தனது காதலனுடன் சுற்றுலா சென்றுள்ள இவர் ஸ்கை டைவிங் அடித்து அசத்தியுள்ளார். ஹெலிகாப்டரில் பறந்தபடி நடுவானில் இருந்து ஸ்கை டைவ் செய்து அந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பிரியாவுக்கு செம தில்லு தான் என அவரை பாராட்டி வருகிறார்கள்.

Categories

Tech |