Categories
சினிமா தமிழ் சினிமா

செம… நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம்… மிரட்டலான போஸ்டர் இதோ…!!!

விஜய் சேதுபதி புதிதாக நடிக்கும் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி புதிதாக நடிக்கும் அதிரடி ஆக்சன் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

மைக்கேல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தற்போது மைக்கேல் படத்தின் இந்த மிரட்டலான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |