Categories
உலக செய்திகள்

செம நியூஸ்: விண்வெளிக்கே உணவு டெலிவரி… யாரு செஞ்சானு பாருங்க… வெளியான வீடியோ….!!

ஜப்பானிய கோடீஸ்வரர்களில் ஒருவர் விண்வெளி வீரர்களுக்கு ஆன்லைன் உணவை டெலிவரி செய்துள்ளார்.

ஜப்பானிய கோடீஸ்வரர்களில் ஒருவராக யுசாகு என்பவரும் திகழ்கிறார். இவர் இந்த மாதம் 11 ஆம் தேதியன்று ஆன்லைன் நிறுவனமான உபெர் ஈட்ஸ் உணவு டெலிவரி நிறுவனத்தினுடைய டப்பாவில் அடைக்கப்பட்ட கானாங்கெளுத்தி மீன் உட்பட பல ஃபுட்டை விண்வெளி வீரர்களுக்கு கொடுத்துள்ளார்.

இதற்காக யுசாகு தனது சொந்த செலவில் விண்வெளியில் 248 மைல் தூரத்தை கடந்துள்ளார். இதனையடுத்து விண்கலத்திலிருக்கும் கதவை திறந்து உணவு டப்பாவை எடுத்து விண்வெளி வீரர்களுக்கு கொடுக்கிறார்.

அதனை பெற்றுக்கொண்ட அந்த விண்வெளி வீரர்கள் தனது மகிழ்ச்சியை விரல் சைகை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதுதொடர்பான வீடியோவை உபெர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |