தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த படங்களை முடித்து ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கின்றார். ஆறுமுக குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனும் படத்தை இயக்கியவர்.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். முழுக்க முழுக்க காமெடி கதை களத்தில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கின்றது. மேலும் நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் படத்தின் மூலமாக ரிஎன்ட்ரி கொடுத்திருக்கின்றார். இந்த படத்தை அடுத்து உதயநிதியுடன் மாமன்னன், ராகவா லாரன்ஸூடன் சந்திரமுகி 2 போன்ற படங்களை நடித்து வருகிறார் வடிவேலு.