நடிகை நயன்தாரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் அஜித், விஜய், ரஜினி, தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் கமர்ஷியல் படங்களில் மட்டுமல்லாது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இவர் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது .
மேலும் நடிகை நயன்தாரா அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.