‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தெலுங்கு டப்பிங் செய்யும் பொது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10 தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ட்ரைலருக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
A pakka treat for Telugu fans 💥@Suriya_offl dubs in his own voice for the telugu version of #ET!@pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #ఈటి pic.twitter.com/TvYKH18wOi
— Sun Pictures (@sunpictures) February 12, 2022
இதனை தொடர்ந்து தெலுங்கிலும் வெளியாக உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திற்கு தனது குரலில் நடிகர் சூர்யா டப்பிங் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.