விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.
#Thalapathy65 is #BEAST@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja#BEASTFirstLook #Thalapathy65FirstLook pic.twitter.com/Wv7wDq06rh
— Sun Pictures (@sunpictures) June 21, 2021
இதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தளபதி 65 படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது .