நடிகர் விஜய் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனைகள் படைத்து வருகிறது . கடைசியாக விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டைய கிளப்பியது.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் . தற்போது ஜார்ஜியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் செம ஸ்டைலாக விஜய் அமர்ந்திருக்கும் பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.