ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீசாக உள்ளது. மேலும் பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு இசையமைத்த எம்எம் கீரவாணி ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
It was my pleasure sir. Much love to you and team #RRR 🤗 https://t.co/nk0LlXpAhG
— Anirudh Ravichander (@anirudhofficial) July 25, 2021
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஒரு புரமோஷன் பாடலை அனிருத் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்எம் கீரவாணி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக அனிருத்துடன் இணைந்து பணி செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, அவர் மிகவும் திறமையானவர், சுறுசுறுப்பானவர்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரீட்வீட் செய்த அனிருத் ‘உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார் .