நடிகர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயன், ஹேமா குறிசி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எச்.வினோத்-போனி கபூர்-அஜித்குமார் இணைந்து ‘நேர்கொண்ட பார்வை’ திரைபடம் வெளியாகி நல்ல வசூலையும் மக்களிடையே நல்ல கருத்தையும் பெற்றுள்ளது.
தற்பொழுது மறுபடியும் இவர்கள் இணைந்து வெளிவரவிருக்கும் திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட து. கொரோனா வைரசின் 3-வது அலை பரவி வருவதால் இப்படத்தின் வெளியிட்டு தகவல் எதுவும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.இப்படத்தில் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.