Categories
தேசிய செய்திகள்

செம! வேறலெவல்…. தனுஷ்கோடி-தலைமன்னார் முதன்முதலாக நீந்தி கடந்து….. சாதனை படைத்த பெண்…!!!

தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே பாக் ஜலசந்தியை சுஜேத்தா என்ற பெண்  முதன்முதலாக நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த சுஜேத்தா என்பவர் தொழில்முறை நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் கடந்த புதன்கிழமை அன்று காலை 8.23 மணியளவில், தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து நீந்த தொடங்கியுள்ளார். அதன்பின் 10 மணி 9 நிமிடங்கள் வரை கடலில் நீந்தி, தலைமன்னார் என்ற பகுதியை அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து மறுபுறமாக நீச்சல் அடித்துக் கொண்டே  தனுஷ்கோடிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மறுநாள் அதிகாலை 2.09 என்ற மணியளவில் சர்வதேச கடற்பரப்பை தாண்டி அவர் நீச்சலடித்து வரும்போது, அவரை ஜெல்லி மீன்கள் கடித்து உள்ளதால்,  பாதிக்கப்பட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் அவர் தம் நீச்சலை முடித்துள்ளார்.

இவ்வாறு சுஜேத்தா தொடர்ந்து 17 மணி நேரம் 34 நிமிடங்கள் 42 கிலோமீட்டர் தூரம் வரை கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு முதன்முதலாக நீந்தி சென்றவர் என்ற சாதனையையும், மேலும் சுஜிதா பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 4-வது பெண் என்ற சாதனையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |