தளபதி65 பட நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து விஜய்யின் 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் வெளியான பிரகாஷன், மனோகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் . இந்நிலையில் நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . கலர் சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து செம ஸ்டைலாக அபர்ணா தாஸ் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.