மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று மௌன ராகம் . இந்த சீரியலின் முதல் சீசன் மிகப்பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் சீசன் தொடங்கப்பட்டது. மேலும் மௌனராகம் 2-ல் சக்தி கதாபாத்திரத்தில் நடிகை ரவீனா நடித்து வருகிறார்.
இவர் ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மௌனராகம் சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ரவீனா மார்டன் உடையில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.