நடிகர் சிம்பு தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
💙#Atman pic.twitter.com/lbJnTArs6g
— Silambarasan TR (@SilambarasanTR_) June 13, 2021
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் வருகிற ஜூன் 21-ஆம் தேதி மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.