Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஹிட்டான ‘செல்லம்மா செல்லம்மா’… 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை…!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடல் யூடியூபில் 1மில்லியன் லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா நடித்துள்ளார் . மேலும் யோகிபாபு, வினய், அர்ச்சனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது . அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் தெறிக்கவிட்டது. இந்நிலையில் தற்போது இந்த பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |