மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என அம்மாநில அரசு மறு உத்தரவு அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தற்போது படிப்படியாக கொரோனா மூன்றாவது அலையின் வேகம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தினசரி பாதிப்பாக 3 ஆயிரம் எண்ணிக்கை என்ற அளவில் குறைந்துள்ளது.இதனால் பெருமளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது.
ஆனாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் கட்டாயம் வைக்க வேண்டும் என்ற உத்தரவு மட்டும் அமலில் இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா மூன்றாவது அலையின் வேகம் குறைந்து வருவதால் இனிமேல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமில்லை. அதாவது மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கட்டாயமில்லை என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இரண்டு தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.