தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், வரும் ஜன-14 ஆம் தேதி பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளிகளுக்கு அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கும் விதமாக தயார் நிலையில் இருக்கவேண்டும். பயனாளிகளை திருப்பி அனுப்பக்கூடாது.
எந்த காரணத்தை கொண்டும் பொருட்கள் இல்லை என்று திருப்பி அனுப்பக்கூடாது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதை கண்காணிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3ஆம் தேதி வந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை வழங்க முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.