மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை விரைவில் அளிக்கப்படும் என ஏழாவது ஊதிய குழு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் DA மற்றும் DR எனப்படும் ஊதிய தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் 17 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது மேலும் வரும் ஜனவரி முதல் 33 சதவிகிதம் வரை உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் சம்பளத் தொகை அதிகமாக வழங்கப்படும் எனவும் டிஏ அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சுமார் 18 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலுவைத் தொகை ஒரே தவணையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் வருகிற 2002ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.