Categories
சினிமா தமிழ் சினிமா

செம!… 7 வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் ரீ என்ட்ரி….. மோகன்லால் படத்தில் புதிய அப்டேட்….!!!!

நடிகர் மோகன்லால் மலையாளத் திரை உலகில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்துக் கொண்டிருப்பதால்  வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது நடித்து விடுகிறார். அதேநேரம் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் அதையும் ஏற்றுக் கொண்டு நடிக்கின்றார். அந்த வகையில் 2004 ஆம் வருடம் வெளியான லவ் என்னும் கன்னட படத்தில் முதன் முதலாக நடித்த மோகன்லால் கடந்த 2015 ஆம் வருடம் மறைந்த புனித் ராஜ்குமார் உடன் இணைந்து மைத்ரே எனும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது இந்த சூழலில் ஏழு வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் கன்னட படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தை இயக்குனர் பிரேம் என்பவர் இயக்கி வருகின்றார் அந்த படத்தில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியான துருவ் சார்ஜா கதாநாயகனாக நடிக்கின்றார். அதில் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வெளியீடு வரும் அக். 20ம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு மாலில் வைத்து நடைபெற இருக்கிறது.

அதே சமயம் மோகன்லால் இந்த படத்தில் நடிக்கிறாரா என்பது பற்றி நேரடியாக தெரிவிக்காமல் அவருடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் இயக்குனர்  வெளியிட்டுள்ளார். அதில் என்ன விதமான உணர்வுகளில் இருக்கிறேன் என்பதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரில் ஒருவரான மோகன்லால் சாரின் ஆதரவு எங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே நேரம் மோகன்லால் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை படத்தின் டைட்டில்காக மட்டுமே அவர் அறிமுகப்படுத்தி என்றார் எனவும் கூறப்பட்டு வருகிறது.

Categories

Tech |