Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செயற்குழு கூட்டம்…. நிறைவேற்றிய தீர்மானம் …. கலந்துகொண்ட உறுப்பினர்கள்….!!

பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர் சங்கத்தினர் விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் வைத்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர் பாண்டி, துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் வினோத் ராஜா, மாவட்ட செயலாளர் மாரி, மாவட்ட நிர்வாகிகள் மூவேந்தன், காளிதாஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் மாவட்ட செயலாளர் பாண்டி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் வருகின்ற மார்ச் 28 , 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக பங்கேற்பது, சிவகங்கை நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சி என தரம் பிரிக்கப்பட்டது. மேலும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங் முறைகளை கைவிட்டு நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட   தீர்மானங்களை  அவர்  நிறைவேற்றியுள்ளார்.

Categories

Tech |