உக்ரைனில் ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஆயிரகணக்கான ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நிறுவி உள்ளது. இதனை தொடர்ந்து உலக நாடுகளின் கண்ணாடி இழை இல்லாமல் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களை பயன்படுத்தி அகண்ட அலைவரிசை இணைய வசதியை அளித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் போர் நடந்து வருவதால் அங்கு உள்ள இணைய வசதிகள் சேதப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் உக்ரைன் துணை பிரதமர் மைகைலோ பெடரோவ் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக் கோள்கள் மூலம் இணைய வசதியுடன் முனையங்கள் அமைத்து தருமாறு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் உக்ரைனின் வேண்டுகோளை ஏற்று ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதாக எலான் மஸ்குக்கு அறிவித்துள்ளார். மேலும் முனையங்களும் நிறுவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.