தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேருந்து நிலையம், எம்.ஜி ரோடு, தக்காளி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இருக்கும் சில்லி சிக்கன் மற்றும் துரித உணவு கடைகள், தள்ளுவண்டி கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது செயற்கை நிறம் ஏற்றிய சில்லி சிக்கன், பல முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
பின்னர் இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களை தரமானதாக பயன்படுத்த வேண்டும் எனவும், செயற்கை நிறம் ஏற்றிய ரசாயன பவுடர்களை தவிர்க்க வேண்டும் எனவும் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.