Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செயற்கை நீர்வீழ்ச்சி பயன்பாட்டிற்கு வரும்…. மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு…!!

சிறுமலையில் இருக்கும் செயற்கை நீர்வீழ்ச்சி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிறுமலை பழையூரில் சுற்றுலா பயணிகளை கவரும் பொருட்டு 33 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகள் தற்போது முடியும் நிலையில் இருக்கிறது. இந்த செயற்கை நீர் வீழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் விசாகன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

அப்போது செயற்கை நீர்வீழ்ச்சி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் தினேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், மலரவன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா, துணைத் தலைவர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories

Tech |