செயல்படுத்தப்படும் போஷான் அபியான் திட்டம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்காக நமது மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு போஷான் அபியான் என்ற பெயரில் மாபெரும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் விதம் குறித்து நிதி ஆயோக் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி மராட்டிய மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடத்தில் உள்ளது. இந்நிலையில் 19 பெரிய மாநிலங்களில் 12 மாநிலங்களில் மட்டுமே 70 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் சிறிய மாநிலங்களை பொருத்தவரை சிக்கிம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டும் 75 சதவீதத்திற்கும் அதிகமாக 12 முதல் 23 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்து போட்டது தெரிய வந்தது. அதே நேரத்தில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளை நோய் தடுப்பு மருந்து பெற்றுள்ளனர்.