செயல்வீரர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நகர பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டம் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில துணை அமைப்பு செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் நகர செயலாளர் வரவேற்புரையாற்றியுள்ளார். இதில் மயிலாடுதுறை நகரிலுள்ள 36 வார்டுகளிலும் பா.ம.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிக்காக பாடுபடுவது பற்றியும், பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மயிலாடுதுறை நகரை சுற்றி புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்றும், நகரில் பேருந்து நிலையங்கள், கோவில்கள் போன்ற முக்கிய இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர், இளைஞர் சங்க செயலாளர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன் முடிவில் நகர துணை செயலாளர் நன்றியுரையாற்றியுள்ளார்.