Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்…. அதிர்ச்சி பின்னணி…. விசாரணையில் போலீசார்….!!!!

சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை திரும்பி அடைக்க பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற என்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளுடன் கடந்த 5 ஆம் தேதி சென்னை மேற்கு மாம்பழத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் மண்டபத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் தமிழ்ச்செல்வி அணிந்திருந்த தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

அதற்குள் சுதாரித்து கொண்ட தமிழ்ச்செல்வி கூச்சலிட்டு கத்தியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் மகளின் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். அதன் பின் அந்த வாலிபரை அவர்கள் அசோக் நகர் காலநிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையில் அவர் கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் சரவணன் என்பது தெரியவந்துள்ளது.

இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஆன்லைனில் சூதாட்டம் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் லட்சகணக்கான பணத்தை இழந்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடமும் சுமார் 5 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனால் விரத்தியடைந்த சரவணன் வேறு வழியில்லாமல் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |