நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது மனிதர்களை மட்டுமல்லாமல் சிங்கங்களையும் பாதித்து வருகிறது. அந்த வகையில் வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிங்கங்களுக்கு கொரோனா குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.
அதில், “செய்திகள் வாசிப்பது சிங்க கூட்டத்தின் தலைவர். நாங்கள் 9 பேருக்கு கொரோனா. அதில் நிலா என்ற எங்கள் தோழி உயிரிழந்து விட்டார். இருவரின் நிலைமை கவலைக்கிடம். எங்களை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியும் எங்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. எங்கள் எதிர்காலம் என்ன, வாழ்வோமோ சாவோமா” என்று பதிவிட்டுள்ளார்.