தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஜூலை 6ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவத்துறை,மாநகராட்சி இணைந்து நடத்தும் தடுப்பூசி முகாம் ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது