Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்…. “இந்தியன் 2 படம் குறித்து சொன்ன தகவல்”… ரசிகர்கள் ஹேப்பியோ ஹேப்பி….!!!!!

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கமல் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியன் 2 திரைப்படம் இயக்கப்பட்டு வந்த நிலையில் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கமல் இந்தியன் 2 திரைப்படம் பற்றி கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பாக துவங்கப்பட்ட இந்தியன் 2 படம் சில காரணங்களால் கிடப்பில் இருந்தது. படம் குறித்து கமல் கூறியுள்ளதாவது, இந்தியன்2 திரைப்படமானது விரைவில் தொடங்கும். படத்தை  நானும் சங்கரும் மீண்டும் தொடங்குவதற்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். ஆகையால் ஷங்கர் தற்போது இயக்கி வரும் தெலுங்கு திரைப்படம் வெளியானதுமே இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கமல் கூறியுள்ளார். இந்தச் செய்தி அறிந்த ரசிகர்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |