தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து மீடியா ஒன் டிவியின் பெயர் நீக்கப்பட்டிருப்பதால் அதன் ஒளிபரப்பு சேவை தடைபட்டுள்ளது. இந்த சேனலில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் கேரளப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சேனலுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதால் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சேனலின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.