செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் தனது பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் கண்மணி சேகர். இளம் செய்தி வாசிப்பாளராக இருக்கும் இவர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அவர் இணையதளத்தில் மிகுந்த பார்வையாளர்களை கொண்டவர்.
இந்நிலையில் தற்போது கண்மணி சேகர் தனது பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் முதலில் ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக எனது பயணத்தை தொடங்கினேன். நான் செய்தி வாசிப்பாளராக எனது பயணத்தை தொடங்கி மூன்று வருடங்கள் மேல் ஆகிவிட்டது. நான் செய்தி வாசிக்கும் போது மிகவும் பயந்தது என் அப்பாவிற்கு தான். அவர்தான் நான் செய்தி வாசிக்கும் போது செய்த தவறுகளை கவனித்து சுட்டிக்காட்டுவார்.
இதை தொடர்ந்து எனக்கு சினிமா துறையில் மற்றும் சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் செய்தி வாசிப்பது தான் எனக்கு மிகவும் பிடித்த வேலை என்றும் அதை விட்டுவிட்டு வேறு துறைக்கு செல்வதில் எனக்கு விருப்பமில்லை, நான் இத்துறையில் இன்னும் கற்றுக்கொண்டு சாதிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்