Categories
மாநில செய்திகள்

செய்தி வினியோகத்தை விரைவுபடுத்த 5 ஜி தொழில்நுட்பம்…. மத்திய அமைச்சர் கருத்து…!!!!!!!

செய்தி விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசும்போது, இன்று செய்தி ஊடகங்கள் தொழில்நுட்பம் சார்ந்தது எனவும், செய்தி விநியோகத்தை விரைவுபடுத்த 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செய்தி ஊடகங்களை விரைவான புதுப்பித்தலுக்கு சாட்சியாக இருக்கிறது.

மொபைல் மூலமாக சாத்தியமான இணைய வளர்ச்சி ஊடகத்துறைக்கு புத்துயிர் அளித்து இருக்கின்றது. 5ஜி தொழில்நுட்பம் மூலம் செய்தி உள்ளடக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது பயனர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். 17 வது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி பற்றி மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் தெளிவான செய்திகளை அனுப்பவும் ஊடகங்கள் உதவி இருக்கின்றன என கூறியுள்ளார். மேலும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பொருட்படுத்தாமல் செய்தி உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை எப்போதும் மையமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |