Categories
உலக செய்திகள்

செய்ன் நதியில்…. சுற்றித் திரியும் திமிங்கலம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் செய்ன் என்ற நதி அமைந்துள்ளது. இந்த நதியில் திமிங்கலம் ஒன்று மிதந்து திரிந்து கொண்டிருப்பதை கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது கூறியதாவது, “இது பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெலுகா திமிங்கலம் என்று தெரிய வந்துள்ளது. இந்த பெலுகா திமிங்கலமானது ஆர்ட்டிக் கடல் பகுதியில் காணப்படுகின்றது.

இந்த வகை திமிங்கலங்கள் முழுமையாக 4 மீட்டர் 13 அடி நீளத்திற்கு வளரக்கூடியது. குளிர்காலத்தின் பிற்பகுதியில் இவை உணவு தேடி ஆர்ட்டிக் கடல் பகுதியை விட்டு சற்று விலகி செல்கின்றன. அவ்வாறு சென்ற திமிங்கல கூட்டத்திலிருந்து ஒன்று மட்டும் தனியாக பிரிந்து செய்ன் நதியில் நுழைந்திருக்கலாம்” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த திமிங்கலத்தை பிரான்ஸ் மீட்புக் குழுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |