Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

செய்யக் கூடாதுன்னு சொல்லியும் ஏன் செய்திங்க…. ரகசிய தகவலில் தூக்கிய பறக்கும் படை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

ராணிப்பேட்டையில் வாக்கினை பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்த 2 பேரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சிறுகரும்பூர் கிராமத்திலிருக்கும் பொதுமக்களிடம் வாக்கினை பெறுவதற்காக 2 பேர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் படி பறக்கும்படை அதிகாரியான பெருமாள் தலைமையிலான குழு அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர். அவர்களை கையும் களவுமாக மடக்கிபிடித்த பறக்கும் படை அதிகாரிகள் காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடமிருந்த 50,000 ரூபாயை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் 2 மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |