Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செய்யக் கூடாதுன்னு சொல்லியும் ஏன் இப்படி பண்ணுறீங்க…. ரகசிய தகவலில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் அ.ம.மு.க கட்சியினர் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதால் அவர்களிடமிருந்த 37,000 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் நியமித்தது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அ.ம.மு.க கட்சியினர் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பறக்கும்படை அதிகாரியான கார்த்திக் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பறக்கும் படையினர் விரைந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் விசாரித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், மற்றொருவர் கையில் அ.ம.மு.க நோட்டீசும், உரிய ஆவணங்களின்றி 37,000 ரூபாயும் இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அப்பணத்தினை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |